சாய்க்கோண செங்கற் சுவர்களின் ஆய்வு. ( Experimenting the Construction of Inclined brick wall)
நகர்ப்புற காடுகளின் இடையில் கட்டப்பட்ட செங்கற் சுவரின் துளைகளின் மூலம் வீட்டின் உள்ளே ஒளியை பரப்புகின்றது.
திரு. வினோத் அவர்களுக்கு இறைவன் தந்த வரமாய் பிறந்த தன் மகளை தனிமையில் அடைக்க விரும்பாது பல நிலையில் தளங்களை கொண்டு திறந்த முற்றங்களுடன் இணைகின்றது. இந்த வீடு ஒரு பரவெளிக்குள் இன்னொரு பரப்பை கொண்டு அமைந்துள்ளது.
வீட்டின் வயது முதிந்தவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் வார விடுமுறையை கழிக்கின்றனர்.
அடித்தளத்தில் வீட்டின் சரியொத்த அறை மற்றும் சமயலறையில் இருந்து நீச்சல் குளத்தை பார்க்கும் வண்ணம் வீட்டின் மையத்தில் உள்ள முற்றம் உதவுகின்றது.
இடைத்தளத்தில் விருந்தினருக்கான அறையுடன் பொழுதுபோக்கு அறை மற்றும் அனைவரும் அமர்ந்து நேரம் கழிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதல் தளத்தில் பணிமனை மேலுரிமையாளர் அறையுடன் (Master Bedroom) கூடிய பச்சை பசும் முற்றங்களும் இருபுறங்களிலும் திரைமறைவான மச்சின் பாகம் (Private balcony) கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகளின் அறையில் நீளம தூணிடைப்பலகணி அமைந்துள்ளது. முன் உள்ள சாய்க்கோண செங்கற் சுவர்களும் பச்சை முற்றங்களும் இயற்கையுடன் இணைந்து வாழும் உணர்வை உண்டாக்குகிறது.
No comments:
Post a Comment