லில்லி தாமஸ் இல்லம்
1. பல்லாவரத்தில் இராணுவ மைதானத்தின் அருகில் அமைந்துள்ள லில்லி தாமஸ் இல்லம் வழியில் வரும் வழிப்போக்கர்கள் பிரம்மிப்பை தாண்டி அவர்களை வரவேற்று, சோர்வு தனிக்கும் தோற்றத்தையும் செயல்பாட்டையும் கொண்டது
2. வீட்டின் தெற்கு வாசல் வரவேற்பை இயற்கையோடு கலந்து பின்னி சூரிய ஒளியை கொண்டாடுகிறது
3. மனித படைப்பான இரும்புக் குதிரைகளின் இருப்பிடம் மேற்கில் இடம்பெற்று தெற்கு வழி வாசல் இயற்கையை கொஞ்சி விளையாடி மனிதர்களை மகிழ்விக்கின்றது.
4. தாமரை மலர்கள் இயற்கையின் உண்மை அழகு என உணர்த்தும் வகையில் வீட்டின் முற்றத்தில் வீற்றுருக்கிறது.
5. வீட்டின் உட்புறத்துக்கு தாங்கலாக நுழைவுவாயில் அமைந்திருக்கிறது.
6. விஞ்ஞான வளர்ச்சியில் வீட்டில் அடைந்து போகின்ற இளைய சமுதாயத்தினருக்கு தமிழ் மரபின்படி ஆரோக்யமாக விளையாட குழந்தைகளுக்கு தக்க இடம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
7. வீட்டின் முறையான குடும்ப அறையில் இருந்து முறைசாரா அந்நிய அறையும் பயனுள்ளதாக பிரிக்கப்பட்டுள்ளது .
8. வீட்டின் குடும்ப அறையின் இரட்டை உயர உச்சவரம்பு பிரமாண்ட தோற்றத்தை வழங்கி வருபவர்களை வரவேற்கின்றது
9. குடும்ப அறையில் என்றும் அமைதியும் இனிமையும் வசிக்கும் வகையில் இனிய சாரல் நீரில் தங்க மீன்கள் தித்திக்கின்றது.
10. வடக்கில் சமையல் அறையை உட்புறமும் வெளிப்புறமுமாக பிரித்து இயற்கையோடு இணைத்து இருக்கின்றது
11. சமயலறையில் இருந்து குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடுவதை வீட்டின் முதியவர்கள் மற்றும் பெற்றோர் கண்டு மகிழ்ந்து கண்காணிக்க உதவுகின்றது.
12. முதியோரின் காத்திருப்பு மற்றும் படுக்கை அரை இடைப்பட்ட தளத்தில் அமைந்து வீட்டின் மேல் மற்றும் கீழ் தளத்தில் இருபவர்களோடு எளிதில் உரையாடும் வண்ணம் இருக்கின்றது.
13. முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் அறையும் காத்திருப்பு பகுதியில் இருந்து குடும்ப அறையை பார்த்து உரையாடும் வகையில் உள்ளது.
14. மாடியின் முகப்பில் இருக்கும் உப்பரிகை இயற்கையின் கைவண்ணத்துடன் ஜொலிக்கிறது .
15. வீட்டின் இரண்டாம் தளத்தில் இரண்டு படுக்கை அறைகளும் அலுவலக அறையும் இருக்கின்றது .வீட்டின் முகப்பு படுக்கை அறையில் இருந்து தனித்து நிற்கும் முற்றம் அழகு படுத்துகின்றது.
16. ஒட்டுமொத்த வீட்டின் முகப்பை ஒளியும் ஒலியும் சேர்ந்து மனிதர்களின் நாள் உங்களால் அழகு படுத்துகின்றது.
No comments:
Post a Comment