Tuesday, August 6, 2019

HONOURABLE FORMER CHIEF MINISTER SELVI J.JAYALALITHA'S MEMORIAL

நினைவுச்சின்னம் : இந்த நினைவிடத்தின் சின்னமான ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழுதலை உருவகப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் போராடி வென்ற அவரை நினைவுபடுத்தும் சிறந்த உருவகம் ஃபீனிக்ஸ் மட்டுமே. " எத்தனை முறை வீழ்ந்தேனோ அத்தனை முறையும் எழுந்தேன் " என்கிற அவரது வைரவரிகளை நினைவுபடுத்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டது இந்த ஃபீனிக்ஸ் நினைவுச்சின்னம். அருங்காட்சியகம்: இவ்வருங்காட்சியகம் செல்வி. ஜெயலலிதா அவர்களின் வரலாற்றையும் அரசியல் பயணங்களையும், மக்களுக்காக செயல்படுத்திய சீர்திருத்த திட்டங்களையும் தலைமுறை கடந்தும் மக்கள் கண்டு உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகம் 20 மீட்டர் குவியல் அடித்தளமும், உலகத்தரத்தில் புதிய தொழில் நுட்பமான SCC (Self Compacting concrete) கான்க்ரீட் மூலம் சாய்க்கோண சுவர்களால் கட்டப்படும் கட்டுமானமாகும். கற்றல் மையம் : செல்வி.ஜெயலலிதா அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மக்களின் நலனுக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் இளைய தலைமுறையின் எழுச்சிக்காகவும் மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டதை நினைவுறுத்தும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. 20 மீட்டர் குவியல் அடித்தளத்துடன் கூடிய இந்த கட்டிடம் பிந்தைய நெருக்கப்பட்ட உத்திரம் (POST TENSION BEAM), பல வண்ண பட்ட படிவ அமைப்பு வேலைகளால் வார்க்கப்பட்ட கான்கிரீட் அமைப்புகளால் நிலைநிறுத்தப்பட்டு இளைஞர்கள் பயனினூம் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். மேற்கூரையானது மூன்று வெவ்வேறு அடுக்கு நிலைகளால் பட்டக கண்ணாடி பதிக்கப்பட்ட இயற்கை ஒளி ஊடுறவும் வகையில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டது. ஃபீனிக்ஸ் பறவை : தன் பிரமாண்டசிறகுகளை விரித்து அதன்கீழ்தன்மக்களை அடைகாத்து, பறக்கதயாராகி உத்வேகத்துடன் இருக்கும் அந்தபறவையின் தோற்றம். "மக்களால்நான் ,மக்களுக்காகவே நான் " என்கிற செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கைபயணத்தை பிரதிபலிக்கிறது . நினைவிடத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட ஃபீனீக்ஸ் பறவையின் வடிவம் 21 மீட்டர் நெடுங்கை தூலத்துடன் பலவண்ண பட்டக (prismatic shutter) படிவ வேலை அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கான்கிரீட் பெருவடிவமாகும். இது முழுவதும் கான்கிரீட்டால் அமையப்பெற்றது. அதன் அடைப்பு வடிவமான பட்டக வடிவ வார்ப்பு வேலைகள் உலகத்தரத்தில் இரும்பு பட்டைகளால் வடிக்கப்பட்டு வார்க்கப்பட்டதாகும். மொத்தநினைவிடமும் அழகிய நீருற்றுகளாலும் ,பசுமையான இயற்கை சூழலாலும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட கண்கவர் நடைபாதைகளும் மனம்குளிரும் நாடகங்களும் இயற்கையுடன் நம்மை ஒருங்கிணைக்கும் நல்முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது

No comments: