Thursday, February 20, 2020

Mr. Sudhakar & Mrs. Sumithra's Residence - Some more delightful views


பெருங்குடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் முழுவதுமாக வெளிப்படும் ( Exposed Brick) பச்சை முற்றங்கள் ( Green court) உடன் இணைந்து அழகு சேர்கின்றது. வீட்டின் நுழைவு வருபவரை வரவேற்கும் வண்ணம் கற்களுடன் கூடிய இயற்கையும் ( Hard landscape) உறவினர்கள் கூடி மகிழும் சபை இடம் ( Gathering space) இரும்புகுதிரையின் இடத்தில் அமைந்துள்ளது.
வீட்டின் சரியோத்த அறை (Living room) பல திண்ணை வடிவில் உட்கார் படிவங்களும் அதனுடன் நீண்டு நிற்கும் பச்சை முற்றங்களும் (Green courts) வெளிச்சுவர்களில் நிலைக்குத்து துளைகளும் வீட்டின் உள்ளே அதிக இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் ஓட செய்கின்றது.
சரியோத்த அறையில் இருந்து சமையல் அறையின் ஒரு பாகத்தை பார்த்து மேலும் பார்க்க தூண்டும் வகையில் இருக்கின்றது. வீட்டின் படிக்கெட்டின் கீழ் மீன் குளம் (Koi pond) படுக்கையறையில் உள்ள முற்றங்களில் இருந்து வேலையிடம் வழியே வந்து இணைகிறது. மேலும் நீண்டு நிற்கும் மூங்கில் குழல் காம்புகள் மேற்மட்டத்தில் (Bamboo pergolas) அமைந்து சூரிய ஒளியை முற்றங்களில் வரவேற்கின்றது. வீட்டின் முதல் தளத்தில் ஊஞ்சற்ப்படுகை (Hammock) அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரைக்கு செல்லும் படிக்கெட்டு இரும்பு சட்டத்தினுடன் கூடிய துளை செங்கல் ( Porous Brick) பச்சை முற்றங்களுடன் சேர்ந்து மாயம் செய்கின்றது. மொத்தத்தில் இந்த வீடு நல்ல செயற்கை கைதிறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 
Picture courtesy : @binsanoommen @tripleopixel











No comments: